Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

என்_உயிர்_அவள்....................!!!!(மிதன் சோபி)

Currently online
நடந்து வரும் நந்தவனம்
சுண்டி இழுக்கும் சோலைவனம்
என்னவள் !

அழகிகளும் பொறாமை
கொள்ளும் அழகு
என்னவள் !


வனப்பில்
தோற்றது வண்ணத்துப்பூச்சி
என்னவளிடம் !

அவளின் அளவிற்கு
வேறு யாருக்கும் இல்லை
குரல் இனிமை !

அழகாகின்றது
எந்த ஆடையும்
அவள் அணிந்ததும் !

அகம் வைத்ததால்
அறியவில்லை அகவை
அழகி அவ்வளவு தான் !

கவிதை வழங்கிடும்
அட்சயப்பாத்திரம்
அவள் முகம் !

நீரின்றி
வாழ்கின்றன மீன்கள்
அவள் விழிகள் !

தேவையில்லை வண்ணம்
இயற்கையில் சிவப்பு
அவள் இதழ்கள் !

பேசாவிடினும்
பார்த்தாலே போதும்
அழகோ அழகு !

நாள் முழுவதும்
ரசிக்கலாம்
நடனமிடும் விழிகள் !

தோற்றது
காந்த விசை
அவள் விழிகளிடம் !

மறந்தது பசி
பிறந்தது மகழ்ச்சி
அவள் வருகை !

ஆயிரம் பேரிலும்
தெரிவாள் தனித்து
ஆயிரத்தில் ஒருத்தி !





நன்றி
(மிதன் சோபி)

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.