Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

உலகின் அழகிய சிறுமி ; வைரலாகும் புகைப்படம் !!!

Currently online
ஒரே நாளில் உலகின் அழகிய சிறுமியாக அங்கீகரிக்கப்பட்டு அசத்தி இருக்கிறாள் நைஜீரியாவை சேர்ந்த ஒரு சிறுமி.

5 வயதான ஜாரே என்ற அந்த சிறுமியின் தோற்றம் வசீகரமானது. 

கவிதை பாடும் கண்கள், மென்மையான சருமம், கவர்ந்திழுக்கும் கூந்தல் என அழகான அத்தனை அம்சங்களும் இந்த சிறுமியிடம் சங்கமம்.

இந்த சிறுமியை மொபே பாமுயிவா என்ற புகைப்பட கலைஞர் பார்த்து பரசவசப்பட்டு படங்கள் எடுத்து அவற்றை “ஓ... இவள் மனிதப்பிறவிதான்... ஆனால் இவள் ஒரு தேவதை” என்று தலைப்பிட்டு ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

அதில் அவர், “இவளை புன்னகைக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். இவளை சத்தமிட்டு சிரிக்க வைத்து படம் எடுத்து இருக்க முடியும். ஆனால் இவளை இவளது இயல்பான நிலையில் நமது கண்களின் வழியாக பார்க்க வைத்து இருக்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.

ஜாரேயின் படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்தவர்கள் ‘இவள் அன்றோ உலகின் அழகிய சிறுமி’ என்று பரவசம் அடைந்துள்ளனர்.

இந்த சிறுமிக்கு ஜோமி என்று 7 வயதிலும், ஜோபா என்று 10 வயதிலும் இரண்டு மூத்த சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.