Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

சதிராடும் மீன்கள்...........!!!!!! வன்னியூர் மகள்

Currently online
கனவுகளில் என் கண்ணில்
கருமணியாய் சுற்றுகிறாய்
நீள்கின்ற விழிகளினுள்
நீந்தி விளையாடுகின்றாய்

மூச்சினிலே கலந்திருந்து
முத்தங்கள் கொடுத்திடுறாய்
பார்வையிலே எனை மயக்கி
பைத்தியம் ஆக்கிவிட்டாய்

மழைக்காலம் முற்றத்தில்
தத்தளிக்கும் மீனினைப் போல்
உனைக்கண்ட நாள்முதலாய்
ஊசலாட விட்டுவிட்டாய்

கெண்டைமீன் கொண்டையடி
கயல்மீனின் கண்களடி
முரல்மீனின் மூக்கோடி
செங்கண்ணி சிவப்போடி

பாரைபோல் மின்னிடுறாய்
பாக்கவைச்சே வாட்டுடிறாய்
ஒட்டி இடையோடி ஓடிவர ஒடியுதடி
ஓடத்திலே நானிருந்து ஓரமாய் பார்கிறேனே

மாமனுக்கு சோறு கொண்டு
மணற் கரையில் இருப்பவளே
கவளம் ஒண்டு ஊட்டிடடி
மச்சான் நான் மயங்கிடுறேன்

மூண்டு முடிச்சிட்டு 
முந்தானை பிடிச்சிழுத்து
வள்ளத்திலே வலம் வந்து
நெஞ்சுக்குள்ள வச்சிடுறன்

நீலக்கடலதிலே நீந்தி அவள் விளையாட
ஓடிவரும் மீன்களுக்குள்
என் மீனும் சதிராட
அள்ளியே அணைத்திடுவேன்
மீன் குட்டி என்னவளை

        நன்றி 
வன்னியூர் மகள்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.