Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டி காயப்படுத்திய மர்ம நபர் : பருத்தித்துறையில் சம்பவம் !!

Currently online
மர்ம நபர் ஒருவர் வீட்டில் தைத்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பினார்.

சத்தியசோதி சிறிகௌசி (வயது 48) பருத்தித்துறை வைத்தியசாலையில் படுகாயமடைந்த நிலையில்  சேர்க்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது.  அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்பளைப் பகுதியில் பிள்ளையுடன் வசித்து வரும் சிறிகௌசி தனது வீட்டில் தைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர் ஒருவர் அவருடைய வாயினை பொத்தியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் மர்மநபரின் பிடியிலிருந்து தப்பப் போராடினார்.

மேலும் கூக்குரல் எழுப்பினார். இதனால் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த சிறிகௌசிக்கு கழுத்தில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.