Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

மூக்கில் சொரசொரவென உள்ள வெண்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள் !!!

Currently online
பலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரவென்று வெள்ளைப்புள்ளிகள் இருக்கும். இது அனைத்து வயது பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான்.

வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தின் மென்மையையும் பாதிக்கும். 

எனவே நாம் நமது வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் வெள்ளைப்புள்ளி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

ஓட்ஸ் மற்றும் தயிர் 

தேவையான பொருட்கள்: 
ஓட்ஸ் - 1 டீஸ்பூன் 
தயிர் - 2 டீஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: 
ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். 

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு 

தேவையான பொருட்கள்: 
தக்காளி சாறு - 1 டீஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: 
ஒரு சிறிய கிண்ணத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

பின் அதை முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். 

பின்பு கிளின்சர் பயன்படுத்தி, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 

இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், வெள்ளைப்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

க்ரீன் டீ மற்றும் கடலை மா

தேவையான பொருட்கள்: 
க்ரீன் டீ - 1 டீஸ்பூன் 
கடலை மாவு - 1/2 டீஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: 
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் க்ரீன் டீயை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.  

பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். 

இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயம் மற்றும் கற்றாழை 

தேவையான பொருட்கள்: 
வெந்தயம் - ஒரு கையளவு 
கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: 
வெந்தயத்தை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 

பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் 

தேவையான பொருட்கள்: 
சந்தன பவுடர் - 1/2 டீஸ்பூன் 
ரோஸ் வாட்டர் - 2 டீஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: 
ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

பின் அதை முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். 

பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.