Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

மொத்த முன் நினைவினிலே.......................!!!!!(வன்னியூர் மகள்)

Currently online
நித்த இராப் பொழுதுகளிலும்
நிரந்தரமாய் குடிகொள்கிறாய்
மொத்த முன் நினைவினிலே
என் சித்தமதை தொலைக்கின்றாய்..!!!

மெல்ல உன் விரல் தீண்டி
செல்லமாய் கதைபேசி
அள்ளி நீ அணைக்கையிலும்
ஜடமாகி கிடக்கின்றேன்..!!!

குறும்பிட்டு கூச்சலிட்டு
கூவி நீ அழைக்கையிலும்
குழந்தையாய் நானிங்கே
குனிந்த படி பிரளுகிறேன்..!!!

சிடு சிடுத்த உன் கோபம்
அனல் தெறிக்கும் உன் நயனம்
பொன் மேனி வழியோடும்
வியர்வைத்துளிகளுடன்
விறுவிறுத்து நிற்கையிலும்
பித்துப் பிடித்தவள் போல்
புரண்டு நான் கிடக்கின்றேன்...!!!

அருகிருந்து பேசிவிட்டு
எனை விட்ட கலையிலே
என் தூக்கம் கலைகிறதே
கனவுகள் கலையவில்லை
காதலின் நினைவுகளே
கையசைத்துச் செல்கிறன....!!!

கண்ணயர்ந்து தூங்கையிலே
தலை வருடிக் கொடுத்திடுறாய்
கண் விழித்துப் பார்க்கையிலே
காலைத் தான் வாரிடுறாய்.......!!!!




நன்றி.
(வன்னியூர் மகள்)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.