Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

சதொச கொள்வனவு செய்யும் ரின் மீனுக்கு மேலதிக கொடுப்பனவு!

Currently online
தேசிய ரின் மீன் தொழிற்சாலைகளில் இருந்து சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் ரின்மீனுக்கு தலா 20 ரூபா மேலதிக தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

மேலும் வாழ்க்கைச் செலவு குழு சமீபத்தில் கூடி இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 

எனவே தேசிய கைத்தொழிற்சாலைகளில் இருந்து கொள்வனவு செய்யப்படும் 425 கிராம் எடை கொண்ட ரின்மீனுக்கு 60 ரூபா செலுத்துமாறு வாழ்க்கை செலவு குழு, சதொச நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய தொழிற்சாலைகளிலிருந்து சதொச கொள்வனவு செய்யும் 425 கிராம் கொள்ளளவை கொண்ட ரின் மீன் ஒன்றுக்கு இதுவரையில் 40 ரூபா  செலுத்தப்பட்டது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இத்தொகையை 60 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.