Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதை எதிர்த்து போராட்டத்திற்கு அழைப்பு!

Currently online
யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெறவுள்ளது.

நாளை ஞாயிற்றுக் கிழமை(08.08.2018) பிற்பகல் 02 மணிக்கு கோட்டையின் தெற்கு வாசல் பக்கமாக குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான கோட்டைக் காணியை இராணுவத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு இராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியுமே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இராணுவ முகாம் அமைப்பதை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி நடைபெறுகின்ற இப் போராட்டத்திற்கு சகலரையும் கலந்து கொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.