Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

நாட்டில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம் !!!

Currently online
காற்றின் வேகமானது நாட்டிலும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்பிலும் அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாகவும் அடுத்த சில நாட்களுக்கும் இந்நிலை தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடன் கூடிய நிலைமை நாட்டின் தென்மேற்கு பகுதியில் காணப்படுவதனால் அடுத்த சில நாட்களில் இன்னும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றதாகவும் மேலும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும்  நாடு முழுவதும், அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.