Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

உருளை காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள் 
உருளைக்கிழங்கு – 3 (சதுரமாக நறுக்கவும்), 
நறுக்கிய காலிஃப்ளவர் – 10 துண்டு,

மசாலா அரைக்க…
சின்ன வெங்காயம் – 15, 
மிளகு – 1/2 டீஸ்பூன், 
சோம்பு – 1 டீஸ்பூன், 
இஞ்சி – 1 அங்குலத்துண்டு, 
பூண்டு பல் – 6, 
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன், 
கசகசா – 1 டீஸ்பூன் + முந்திரிப்பருப்பு – 10 (தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்), 
உப்பு, எண்ணெய் – தேவைக்கு, 
சோள மாவு – 1 டீஸ்பூன், 
அரிசி மாவு – 1 டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், 
ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிது.

செய்முறை 
அரைக்க கொடுத்துள்ளதை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இக்கலவையில் உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் துண்டுகளை போட்டு புரட்டி உப்பு, ஆரஞ்சு ஃபுட் கலர், சோள மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள் சேர்த்து பிசறி 1/2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பரிமாறவும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.