Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் தொடர்வதாக ஐ நாவின் விசேட அறிக்கையாளர் பென் எமேர்சன் அறிக்கை!

Currently online
இலங்கையில் தற்போதும் சித்திரவதைகள் பரவலாக நடைமுறையில் உள்ளதாக ஐக்கியநாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் பென் எமேர்சன் இலங்கைக்கான தனது விஜயத்தின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடையங்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது நிலைமாற்றுக்கால நீதி குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் எவையும் உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கு போதுமானவையாக காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளதுடன் நல்லிணக்கம் மற்றும் நீதியான நீதித்துறை குறித்த சீர்திருத்தங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சித்திரவதைகளை பரவலாக பயன்படுத்துபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரம் தொடர்கின்ற நிலையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக எண்ணிக்கை குறிப்பிட முடியாத அளவிலான நபர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்திருந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

''நான் மிகமோசமான ஈவிரக்கமற்ற சித்திரவதைகள் குறித்து என்னுடைய விஜயத்தின் போது அறிந்துகொண்டேன். சித்திரவதைகள், தடியால் அடித்தல், பெட்ரோல் மண்ணெண்ணை நிரம்பிய பிளாஸ்டிக் பையினால் முகத்தை மூடி மூச்சுத்திணறச்செய்தல், நகங்களை பிடுங்குதல், ஊசியால் நகத்தில் குத்துதல் போன்ற சித்திரவதைகள் தற்போதும் நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.