Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

சுவையான வெங்காய தோசை!!!

Currently online
தேவையான பொருட்கள்

01) புழுங்கல் அரிசி –  03 கப்.

02) உளுத்தம்பருப்பு –  அரை கப்.

03) பச்சரிசி –  ஒரு கப்.

04) பச்சை மிளகாய் –  04.

05) வெங்காயம் –  02.

06) கடுகு –  கால் டீஸ்பூன்.

07)கறிவேப்பிலை –  சிறிதளவு.

08) உப்பு –  தேவையான அளவு.

09) எண்ணெய் –  தேவையான அளவு.


செய்முறை 

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக 02 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.


அவற்றை தனித் தனியாக அரைத்து வைத்து பின்னர் ஒன்றாக்கி உப்பு சேர்த்துக் கலக்கவும்.


பிறகு இந்த மாவை ஒரு இரவு புளிக்க வைத்து கொள்ளவேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும் வைக்கவும்.

பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் தேய்த்து மாவை ஊத்தப்பம் போல் வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் எடுக்கவும்.

இதோ சுவையான வெங்காய தோசை ரெடி!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.