Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

பாடசாலைக்குச் சென்ற மாணவனுக்கு வீதியில் நிகழ்ந்த விபரீதம் !!

Currently online
வாகனத்தின் கதவை சாரதி அவதானமின்றி திறந்தமையினால் அவ்வழியாக சைக்கிளில் பாடசாலைக்கு சென்ற மாணவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளான்.

குறித்த விபத்தில் காத்தான்குடி-01, மீரா ஜும் ஆப் பள்ளி ஒழுங்கையைச் சேர்ந்த 14 வயதுடைய ஏ.பி.எம்.இன்ஷாப் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் காத்தான்குடி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கையில் முன்னாடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் கதவினை வாகனத்தின் சாரதி அவதானமின்றி திறந்தமையினால் வாகனத்தின் கதவில் மோதுண்டு சிறுவன் கீழே வீழ்ந்துள்ளான். இதன்போது பின்னாடி வந்த முச்சக்கர வண்டியும் சிறுவன் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். 

இந் நிலையில் குறித்த மாணவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.