Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு!

Currently online
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6 ஆவது சர்வதேச நகரங்கள் தொடர்பான மாநாடு மற்றும் சிங்கப்பூர் சர்வதேச வார நிகழ்விலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் புதிய உற்பத்தி மற்றும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்திற்கு பொருத்தமான நிலைபேறா நகரத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலேயே  இவ் ஆறாவது மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே நாளை(08.07.2018) இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் செல்லவுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீசின் லுங் தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நகரங்கள் தொடர்பான மாநாட்டின் ஆரம்ப கூட்டத் தொடரில் நகர அபிவிருத்தி சுற்றாடலைப் பாதுகாத்தல் என்ற தொனிப்பொருளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.