
துள்ள துள்ள
உன்னிடம் சொல்லிடும் காலங்கள்
இல்ல இல்ல
என்னிடம் கூடுது ஏக்கங்கள்
மெல்ல மெல்ல
தடுக்குது ஏனோ உணர்வுகள்
சொல்ல சொல்ல
எட்டத்தில் பார்த்ததும் உன்னை
நீளுது என் கைகள் அள்ள
கிட்டத்தில் கண்டதும் நெஞ்சம்
தள்ளித் தான் போகுது மெல்ல
எப்படி என் காதலை
சொல்லப் போறேன்
எப்போது உன் காதலை
வெல்லப் போறேன்
இப்போதும் இப்படி தானடி - இனி
எப்போதும் சொல்வது வீணடி
தள்ளியே போனது என் காதல்
தண்ணீராய் தத்தளிக்குது என் வாழ்தல்
நன்றி
எஸ்.பி.லக்குணா வட்டக்கச்சி