Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

தென்மராட்சி பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ள நடவடிக்கை!

Currently online
தென்மராட்சி பகுதியில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட  மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் சுமார் 1500 ஏக்கரும்,  கைதடியில் சுமார் 1500 ஏக்கரும், தனங்கிளப்பில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பும் என மொத்தமாக சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பு நன்னீர் மீன்வளர்ப்பு நடவடிக்கைக்காக இனங்கணப்பட்டு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் உத்தேச செலவீனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளது. 

எனவே குறித்த பிரதேசத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டால் வேலைவாய்ப்பு மற்றும் நீண்டகால வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் பிரதேச அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் குறித்த திட்ட வரைபைத் தொடர்ந்து உரிய அனுமதிகளுடன் இதற்கான நிதிமூலங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது அல்லது முதலீட்டாளர்களை எவ்வாறு இனங்காண்பது என்பது  தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர்  க.வாமதேவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.