Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 07, 2018

மருதங்கேணியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மீனவர்களை வெளியேற்றுமாறு வழக்குத் தாக்கல்!

Currently online
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக   அரசாங்க      காணியில் 
வாடி அமைத்து கடல் அட்டை தொழில் புரிபவர்களை அகற்ற உத்தரவிடுமாறு மருதங்கேணிப் பிரதேச செயலாளர் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தங்கியிருந்து கடல் அட்டைத் தொழில் புரியும் பிற மாவட்ட மீனவர்கள் அரச நிலத்தில் அத்து மீறி குடியமர்ந்தே குறித்த தொழிலை மேற்கொள்கின்றனர். நேற்று(06.07.2018) இவ்வாறு தொழில் புரியும் 08 நிறுவனங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த நிறுவனங்களிற்கு எதிராக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(10.07.2018) மேற்படி வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 

குறித்த பகுதியில் உள்ளூர் மீனவர்களைப் பாதிக்கும் வகையில் வெளி மாவட்ட மீனவர்கள் பலர் தங்கி நின்று சட்டத்திற்கு முரணாக தொழில் புரிவதனால் பல பாதிப்புக்கள் நிகழ்வதாக உள்ளூர் மீனவர்கள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி முன்னாட்களில் போராட்டங்களிலும் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட எல்லைப் பகுதியில் வாடி அமைத்துள்ள 04 நிறுவனங்கள் தொடர்பில் நாளை(08.07.2018) பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.