Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

யாழ்.ரசிகர்கள்,டோனியின் பிறந்த தினத்திற்காக முன்னெடுத்த சமூகப் பணி!

Currently online
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் எம்.எஸ் டோனியின் 37வது பிறந்த தினத்தை முன்னிட்டு டோனி ரசிகர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று(07.07.2018) இரண்டு  சமூகப்பணிகளை  மேற்கொண்டிருந்தனர்.

உலகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் டோனிக்கு யாழ்ப்பாணத்திலும் பெருமளவு ரசிகர்கள் இருப்பது தெரிந்த விடயம் தான். அதில் இவர்களது சமூக பனி அதனைப் பிரதிபலிக்கின்றது.

கைதடி நவீலட் பாடசாலையில் பயிலும் விழிப்புலன் குறைந்த மாணவர்களுடன் இணைந்து டோனியின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள், அங்கு தேனீர் விருந்தும் வழங்கியுள்ளார்கள். 

பின்னர் அதனைத்தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலை தாதிகள் பயிற்சிக் கல்லூரியில் இரத்த தானமும் வழங்கியுள்ளனர்.

இளைஞர்களுக்கான மதிப்பு மங்கிப் போயுள்ள        இந்த        சூழ்நிலையில்
இவர்களது பணிக்காக நமது ஊடகம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமையடைகின்றோம்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.