Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

பெற்ற குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு சென்ற தாய் !!

Currently online
பெற்ற பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையிலேயே விட்டு சென்றுள்ளார்.

ஆரணி அருகேயுள்ள உள்ள கிராமம் பையூர். இங்கு வசித்து வருபவர் லட்சுமி(வயது-18). 

குறித்த பெண் ஆரணியை சேர்ந்த ஒருவரை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணமாகாமலேயே கர்ப்பமடைந்துள்ளார்.

இவ் விடயத்தை அந்த நபருக்கு சொல்ல முயன்றபோது அவர் ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அவரை விட்டு விலகியுள்ளதுடன் வீட்டுக்கு தெரியாமல் இதனை மறைத்துள்ளார்.

கர்ப்பகாலம் நெருங்கியதும், வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பின்னர் பெற்ற குழந்தை என்றும் பாராமல், பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

பின்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டபோது குறித்த பெண் கொடுத்த முகவரியை வைத்து மருத்துவமனை நிர்வாகம், அவரை தேடி சென்று குழந்தையை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.