Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

இறால் குடைமிளகாய் வறுவல் செய்வது எப்படி?

Currently online
தேவையான பொருட்கள் : 

இறால் - 1 கிலோ 
பச்சை குடைமிளகாய்- 2 
சிகப்பு குடைமிளகாய் - 1 
வெங்காயம் - 4 
பூண்டு - 6 
தனியாத்தூள் - 1 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு 
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை : 

இறாலை சுத்தம் செய்து நன்கு கழுவி, தண்ணீரை பிழிந்துக் எடுத்துக் கொள்ளவேண்டும். வெங்காயம் மற்றும் குடைமிளகாயை நறுக்கி, பூண்டை நசுக்கி வைத்து, அனைத்து தூள்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

அடி கனமான சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இறாலை கொட்டி நன்கு வதக்கவும். பின்னர் ஒரு தட்டில் கொட்டி தனியாக வைக்கவும். 

மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, குடைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். 

பின்னர் தனித்தனியாக எடுத்து வைத்துள்ள தூளை கொட்டி மீண்டும் கிளறவும். குடைமிளகாய் அரைவேக்காட்டில் இருக்கும் பொழுது இறாலை கொட்டி எல்லாவற்றையும் சேர்த்து கிளறவும். 

பின்னர் 5 நிமிடம் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். ருசியான இறால் குடைமிளகாய் வறுவல் ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.