Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

கத்தியுடன் நிர்வாணமாக சுற்றித்திரியும் கிறீஸ் பூதம் ; அச்சத்தில் மக்கள் !!

Currently online
இரவு நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் நிர்வாணமாக சுற்றித்திரியும் கிறீஸ் பூதம் காரணமாக, ஹோமாகம, பனாகொட இராணுவ கிராமம், ரோமியல் மாவத்தை, பெலந்தகொட, கப்புறுகொட போன்ற பிரதேசங்ளை சேர்ந்த பெண்கள் பொழுது சாய்ந்த பின்னர், வீட்டை வெளியே செல்ல அஞ்சுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மாத காலத்திற்கு மேலாக இந்த நிலைமை காணப்படுவதாகவும் இது குறித்து அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர.

இரவு 7 மணி, 10 மணிக்கு இடையிலும் அதிகாலை 2 மணிக்கும் 5 மணிக்கும் இடையிலும் இந்த நிர்வாண மனிதன் பிரதேசத்தில் சுற்றித்திரிவது பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன.

நிர்வாணமாக செல்லும் நபர் கையில், கத்தி மற்றும் பந்தம் ஒன்றுடன் செல்வதை சில பெண்கள் கண்டுள்ளனர்.

இந்த நிர்வாண மனிதனை கண்டு பெண்கள் சத்தமிட்டுள்ளதுடன் அந்த நபர் மாயமாகியுள்ளார். 

கண்டுபிடிக்க முடியாத படி அந்த மனிதன் தப்பிச் சென்று விடுவதாக பெண்கள் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.