Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

சுவையான ஓட்ஸ் உப்புமா!!!

Currently online
 தேவையா ன பொருட்கள்:



01) சின்ன வெங்காயம் - 15.

02) ஓட்ஸ் - கால் கிலோ.

03) எண்ணெய் - 02 டேபிள் ஸ்பூன்.

04) நெய் -  01 டேபிள் ஸ்பூன்.

05) பெருங்காயம் - 01 சிட்டிகை.
06) கறிவேப்பிலை - 02 கொத்து.

07) உப்பு - 01 டீஸ்பூன்.

08) பீன்ஸ் - 05.

09)கடலைப்பருப்பு-01ஸ்பூன்.

10) இஞ்சி - சிறிய துண்டு.

11) பச்சை மிளகாய் - 04.

12) கரட் -  01.

13) கடுகு - 01 ஸ்பூன்.

14) உளுத்தம் பருப்பு - 01 ஸ்பூன்.


செய்முறை : 

முதலில் வெங்காயம், மிளகாய், காரட், பீன்ஸ், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் ஓட்ஸை நெய் விட்டு வாசனை வர வறுத்து வைக்கவும். 

வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போடவும்.

கடுகு வெடித்து, பருப்புகள் சிவந்ததும் பெருங்காயம் போட்டு அரை நிமிடம் கழித்து நறுக்கி வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, இஞ்சி, காரட், பீன்ஸ் முதலியவற்றை போட்டு வதக்கவும்.


காய்கள் வதங்கியதும் கறிவேப்பிலை உருவிப் போடவும். 

ஒரு நிமிடம் கழித்து அரை லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நீர் கொதித்ததும் ஓட்ஸைப் போட்டு கட்டி தட்டாமல் கிளறவும்

அடுப்பை சிம்மில் வைத்து விடாமல் கிளறி ஓட்ஸ் வெந்ததும் இறக்கவும். 

இதோ சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.