Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

சர்க்கார் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி !!

Currently online
சர்கார் படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து நடிகர் விஜய் சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்கார்’.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 

இதில், நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போல் அமைந்திருந்தது. இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியது. 

இந்நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி, “புகைப் பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் கம்பெனிக்கு எதிராக குரல் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.