Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவுக்கு கால வரையறை நிர்ணயிக்கப்படவில்லை !!

Currently online
வடகொரியா அணு ஆயுதங்களை அழிப்பதற்கு கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் ட்ரம்பும் கடந்த மாதம் 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன. இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை உடனடியாக தொடங்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாகக் கூறப் படுகிறது. 

இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூலிப்படைத் தலைவனைப்போல செயல்படுவதாக வடகொரியா கடந்த வாரம் குற்றம்சாட்டியது. மேலும் உயர்நிலை பேச்சு வார்த்தையின்போது அமெரிக்காவின் நிபந்தனைகள் பிரச்சினைக் குரியதாக உள்ளதாகவும் கூறி யிருந்தது.

இந்நிலையில் ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறும் போது, “வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. அணு  ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வேக உச்ச வரம்பு இல்லை. இந்த விவகாரத்தில் அவசரப்படத் தேவையில்லை. வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கிடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.