Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

விஜயகலா பதவி துறந்தால் மட்டும் போதாது;மஹிந்த ஆவேசம்!

Currently online
விஜயகலா மகேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்தால் மட்டும் போதுமானதல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகியதன் மூலம் விஜயகலாவின் பார தூரமான கூற்று குறித்த குற்றச் செயலிலிருந்து அவர் முழுமையாக விடுபட்டதாக அர்த்தப்படாது. 

தற்போது அரசாங்கம் எதிர்க்கட்சியினருக்கு அமுல்படுத்தும் அதே சட்டத்தை விஜயகலாவிற்கு எதிராகவும் அமுல்ப்படுத்த வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் பொறுப்பு சொல்ல வேண்டும்.

பௌத்த தேரர் ஒருவரோ அல்லது முஸ்லிம் மதப் பெரியார் ஒருவரோ இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏனைய தரப்பினரும் பாரிய போராட்டங்களை நடத்தியிரப்பார்கள். கோசங்களை எழுப்பியிருப்பார்கள். 

விஜயகலாவின் கூற்றினை சில்லறை நகைச்சுவையாக மாற்றி விடாது பொறுப்புணர்ச்சியுடன் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் எதிர்க்கட்சியாகிய நாம் அவதானத்துடன் கண்காணிப்போம் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.