Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

உலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் "ஸா ஸா" மரணம் !!!

Currently online
உலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்காவை சேர்ந்த நாய் "ஸா ஸா" என்ற நாய் மரணமடைந்தது. 

கலிபோர்னியாவை சேர்ந்தவர் மெகன் பிரெய்னர்டு. இவரிடம் அமெரிக்கா வகையை சேர்ந்த ஸா ஸா என்ற நாய் இருந்தது. இந்த நாய்க்கு 9 வயது ஆகிறது.

இந்த நாய் கடந்த மாதம் கலிபோர்னியாவின் பெட்டாலூமா என்ற இடத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டது. இதில் உலகின் அசிங்கமான நாய் என்ற பட்டத்தை பெற்றது. 

இந்நிலையில் இந்த நாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூக்கத்திலேயே இறந்துவிட்டது. 

இதுகுறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில் ஸா ஸா இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாயின் வாய்க்குள் அதன் நாக்கை வைக்க முடியாததால் வாயிலிருந்து எச்சில் வந்து கொண்டே இருக்கும். அதன் பற்களும் நீளமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.