Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 31, 2018

ஆசியாவின் சிறந்த படமான ‘மெர்சல்’ !!!

Currently online
இளைய தளபதி விஜய் 3 வேடங்களில் நடித்த மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. 

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக ஐஏஆர்ஏ- எனும் சர்வதேச விருதுக்கான பட்டியலில் நடிகர் விஜய் பெயர் இடம் பெற்றுள்ளது.

சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதுக்கான வாக்குப்பதிவு இணைய தளத்தில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார்.  

இந்நிலையில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக மெர்சல் படத்தையும் தேர்வு செய்து திரைப்பட விழாவில் திரையிட உள்ளனர். 

தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. ஆசியாவின் சிறந்த படங்கள் வரிசையில் ஒன்றாக மெர்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.