Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

கம்பு குழிப் பணியாரம் செய்வது எப்படி?

Currently online
தேவையானவை: 
01) பச்சரிசி,இட்லி அரிசி,கம்பு - ஒரு கப். 
02) உளுத்தம் பருப்பு - கால் கப்.
03) வெந்தயம் - ஒரு டீஸ்பூன்.
04) பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்.
05) பச்சை மிளகாய் -  02.
06) கொத்தமல்லித் தழை - சிறிதளவு.
07) சின்ன வெங்காயம் - ஒரு கையளவு. 
08) தேங்காய்த் துருவல் - கால் கப். 

    (தாளிக்க: கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.)



செய்முறை: அரிசி, கம்பு, உளுந்துக் கலவையுடன் வெந்தயம் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

பின்னர் ஊறவைத்தவற்றுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை ஆறு முதல் எட்டு மணி நேரம் புளிக்க விடவும். 

பின்னர் தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து மாவில் கலக்கவும். 

பின்னர் அந்த கலவையில்  பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். 

பின்னர் குழிப் பணியாரத் தட்டில் ஊற்றி எண்ணெய் விட்டு இரண்டு முறை திருப்பிப் போட்டு முறுகலானதும் எடுக்கவும். 

தேங்காய் சட்னி அல்லது பொடியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இந்த உணவில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சுவையான நொறுக்குத் தீனி என்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.