Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 18, 2018

தமிழச்சி என்று சொல்வதில் அவமானம் ; கஸ்தூரி வேதனை !!

Currently online
நான் தமிழச்சி என்று சொல்லிக்கொள்ள அவமானப்படுகிறேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘நான் தமிழச்சி என்று சொல்லிக்கொள்ள அவமானப்படுகிறேன்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வரிசையாக இதேமாதிரி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஹாசினி விஷயத்துக்குப் பிறகு சென்னையில் இதுமாதிரி சம்பவங்கள் நடக்காது என நினைத்தால், அதையெல்லாம் செய்தியாகப் படித்துக்கொண்டே இன்னொரு பெண்ணை சீரழித்துக் கொண்டிருக்கிறார்களே... 12 வயதுப்பெண், 7-ம் வகுப்பு படிக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, என் பெண்ணைப் போலவே இருக்கிறது.

புரசைவாக்கத்தில் நடப்பது போயஸ் கார்டனில் நடக்காது என்பது என்ன நிச்சயம்? யாருமே இங்கு பாதுகாப்பாக இல்லை. இந்த மாதிரி இருந்தால், தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ எப்படி வாழ முடியும்? தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஆண்களும் இப்படித்தான் மோசமானவர்களா என்றே எனக்கே தோன்றுகிறதே...

‘பெண்கள் பாதுகாப்பில் உலகத்திலேயே இந்தியா தான் மோசமான நாடு’ என சமீபத்தில் ஒரு சர்வே வெளியானது. ‘இந்தியாவின் மானத்தைத் திட்டமிட்டுக் கப்பலேற்றுகிறார்கள்’ என்று கூவியவர்கள், தங்களுடைய முகத்தைத் தற்போது என்னிடம் காட்டுங்கள். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? ஆப்கானிஸ்தானைவிட, சிரியாவைவிட வெட்கக்கேடான ஒரு நிலையில்தானே நாம் இருக்கிறோம். அங்கு பெண்களை மோசமாக நடத்துகிறார்கள். இங்கு பெண்களை மோசமாக நடத்துபவர்கள் யாரும் மனிதர்களே அல்ல, எல்லோரும் விலங்குகள். இது சென்னை நகரமா இல்லை மொத்தமாகவே வண்டலூர் உயிரியல் பூங்காவா என்று தெரியவில்லை.

‘தண்டனை வேண்டும்’ என நாமும் ஒவ்வொரு முறையும் கூவிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 22 பேரில், 18 பேரைக் கைது செய்திருக்கின்றனர். ஆனால், அவர்களுடைய முகத்தை மறைத்துத் தானே புகைப்படங்களை வெளியிடுகின்றனர். ஏன் முகத்தை மறைக்க வேண்டும்? குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாராவது நிரபராதியாக இருந்துவிட்டால், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாழ்க்கை பாழாகிவிடும் என்றுதானே... சரி, பொதுமக்களுக்கு முகத்தைக் காட்ட வேண்டாம்.

இந்த மாதிரி திட்டமிட்டு ஒரு குழந்தையை ஏழு மாதங்களாகச் சீரழித்தப் பிரச்சினைக்கு, ‘இந்த மாதிரி ஒரு குற்றத்தில் மாட்டினார்கள்’ என்பதையாவது அவர்கள் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டும். அந்த 22 பேரின் குடும்பத்திலும் 12 வயது குழந்தை மகளாகவோ, பேத்தியாகவோ இருப்பார்கள்தானே... ஒரு குழந்தையைப் பார்த்து இந்த மாதிரி ஃபீலிங் எப்படி வரும்? என்ன தமிழ்க் கலாச்சாரம்... இந்த மாதிரி குற்றத்தில் மாட்டியவர்கள் வீட்டின் முன்னால், அவர்கள் முகத்தை போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டும். நம்மூரில் எதற்கும் பயப்படுவதாகத் தெரியவில்லை. ஒருவேளை பொதுவெளியில் அவமானப்பட்டால், அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் அவமானப்பட்டால்... ஒருவேளை அதனால் முன்னேற்றம் எதுவும் இருக்குமா என நப்பாசை. நம்பிக்கை என்றெல்லாம் சொல்ல முடியாது.

‘யுத்தம் செய்’ படத்தில், காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை, ஒரு பார்ட்டியில் மருந்து கொடுத்து இரண்டு பேர் சேர்ந்து சீரழிப்பார்கள். ‘என்ன இது... சினிமாவில் இப்படியெல்லாம் காட்டுகிறார்கள்? சினிமா என்பதற்காக கிராபிக்ஸில் இப்படிக் காட்டுகிறார்களே...’ என்றெல்லாம் வருத்தப்பட்டேன். கடைசியில், சினிமாவெல்லாம் ஒண்ணும் கிடையாது என்பது போல் பண்ணிவிட்டார்களே... ‘சினிமா தான் இதற்கெல்லாம் காரணம், பெண்கள் ஆடை உடுத்தும் விதம்தான் இதற்கெல்லாம் காரணம்’ என்று யாராவது சொல்லிப் பாருங்க... இந்த மாதிரி கொடுமையான சம்பவங்களை சினிமாவில் யார் காட்டுகிறார்கள்? பள்ளிச் சிறுமி தவறாக எப்படி உடை உடுத்தியிருக்கப் போகிறது?

இந்தச் சம்பவத்துக்கு ஆடையோ, வயதோ, அந்தப் பெண்ணின் நடத்தையோ காரணமில்லை. அந்தப் பெண்ணுக்கு இருக்கும் குறையைக்கூடப் பொருட்படுத்தாமல், அதையே அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு ஏழு மாதங்களாக இப்படிச் சீரழித்திருக்கிறார்கள். குழந்தைகளையும் சிறுமிகளையும் மாற்றுத்திறனாளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிற கேடுகெட்ட கலாச்சாரம்தான் நம்முடைய தமிழ்க் கலாச்சாரம் என்று சொன்னால், நான் தமிழச்சி என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன், அவமானப்படுகிறேன்.

சென்னை காவல்துறைக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள். யார் யாரையோ சமூக விரோதிகள் என்று சொல்லி சுடுகிறார்களே... இங்கு கண்ணெதிரே தெளிவாகத் தெரிகிற சமூக விரோதிகளுக்கு சட்டப்படி நிறைய தவணை கொடுக்காமல், சட்டுபுட்டுனு வழக்கை முடியுங்கள்” என்று கூறியுள்ளார் கஸ்தூரி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.