சிக்கன் – 1/2 கிலோ ( 2 லெக் பீஸ் , 2 ப்ரெஸ்ட் பீஸ் )
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
முட்டை -1
மைதா மா – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 6 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோயா சார்ஸ் – 1 ஸ்பூன்
தக்காளி சார்ஸ் -1 ஸ்பூன்
சில்லி சார்ஸ் – 1 ஸ்பூன்
ப்ரட் தூள் – 1.கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் குக்கரில் சிக்கன் இஞ்சி பூண்டு விழுது, சோயா சார்ஸ், தக்காளி சார்ஸ், சில்லி சார்ஸ், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 2 -3 விசில் விடவும் .
அடுத்து ப்ரெட்டை எடுத்து சைடு கட் செய்து மிக்சியில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்து கொள்ளவும் .
ஒரு பாத்திரத்தில் முட்டை, மைதா மா ,மிளகு தூள், மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மா பதத்திற்கு கலக்கவும் .
சிக்கன் வெந்தவுடன் எடுத்து மாவில் நனைத்து ப்ரெட் தூள்ல தொட்டு எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
கேஎப்சி சிக்கன் ஃப்ரை ரெடி .