Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 17, 2018

ஒரு கதை சொல்லப் போறன்...! (பாகம் 01)

Currently online
வாழ்க்கை என்பதோர் அழகிய அற்புத நாடகம். இங்கே துன்பங்கள், இன்பங்கள், ஏமாற்றங்கள், பகைகள் ,துரோகங்கள் என்று ஏகப்பட்ட காட்சிகள் அரங்கேறி ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி அடங்கிப் போகிறது. இத்தனை காட்சிகளையும் சாமர்த்தியமாக கடந்து விடக் கூடியவர்கள் பருவம் அனைத்தும் கடந்து பெரும் திருப்தியோடு இவ்வுலகை விட்டு வெளியேறுகின்றார். ஆனால் சிலரோ விரக்தி வெறுப்புகளோடு பெறுதற்கரிய உயிரை ஓரிரு நிமிடங்களில் முடித்து விடுகின்றனர். இதற்குள் காரணம் என்று சொல்லிக் கொள்ள காதல் முறிவுகள், பிரிவுத்துயர், வறுமை இப்படி பலவற்றை உள்வாங்கிக் கொள்கின்றனர். இதிலிருந்து மீண்டு வாழ்வதற்கு முயற்சிக்கும் மனப்பக்குவத்தை இழந்து விடுகின்றனர்.

ஆனால் பாருங்கள் அந்த கடல் அலையை; ஓய்வின்றி அடிக்கிறது, பாறைகளில் மோதியும் கொள்கிறது, நொந்து போய் நிறுத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து தனது செயலை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அது இலக்கு இல்லாதது. மனிதன் இலக்கோடு முயற்சிக்க வேண்டியவன். வாழ்க்கை என்றுமே முடிந்து போவதில்லை. வாழும் உயிர்களே முடிந்து போகின்றன.  இப்படியோர் நாடகத்தில் ..

முயற்சி ஒன்றே முழு மூச்சாய் கொண்ட எத்துயர் வந்தும் சளைத்திடாத ஒரு மனிதத்தையும் நான் பாத்திருக்கிறேன்.

சோகங்கள் கண்டு துவண்டு அழுபவள் தான். ஆனால் மீண்டு கொள்ளும் முயற்சி கொண்டவள். அவள் ஒரு அதிசய தேவதை தான் அழகால் அல்ல. கொஞ்சம் கறுப்பென்றும் சொல்ல முடியாத சிவப்பி என்றும் சொல்ல முடியாத சாதுவான நிறம். அவள் கண்களோ அப்பப்பா அம்பு வீசி ஆளை இழுத்து அடக்கம் செய்யும் கண்கள். மெல்லிய உடல்வாகு. ஊர் பெண்கள் அத்தனை பேரும் வாய் பிளக்கும் நீண்ட கருங்கூந்தல் கன்னி அவள்.

கண்ணூறு துடைக்கும் கன்னத்து மச்சம். அவள் புன்னகை ஒவ்வொன்றும் நாணத்தின் இலக்கணங்கள். சிறியவள் அவள் பயணத்திற்குள் ரசிகையாய் நான் நுழைந்து கொண்டேன். அவள் பயணம்......................

அவள் பயணத்தில் : சுஜா தவம்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.