Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (01.08.2018)

Currently online
மேஷம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து போகும். பிள்ளைகளால் டென்ஷன் வந்து போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு வந்துப் போகும். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.   

ரிஷபம்
உணர்ச்சி பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.   

மிதுனம்
எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். எதிர்ப்புகள் அடங்கும் நாள்.    

கடகம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.    

சிம்மம்
சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.  

கன்னி
மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  

துலாம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

விருச்சிகம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டிய எண்ணம் வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.    

தனுசு
எதிர்ப்புகள் அடங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.  

மகரம்
தைரியமாக சில முக்கிய  முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.   

மீனம்
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.