Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, August 02, 2018

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் (02.08.2018

Currently online
மேஷம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்தும் தருவார்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

கடகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் உற்கமடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள். 

கன்னி
கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

துலாம்
சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். 

விருச்சிகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள். 

தனுசு
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். 

மகரம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.       

கும்பம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  

மீனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.