Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 04, 2018

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்!!!!(04.08.2018)

Currently online
மேஷம்: 
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறு விதமாகப் புரிந்து கொள்வார்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்: 
அநாவசியச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்: 
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிட்டும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சிறப்பான நாள்.

கடகம்: 
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.

சிம்மம்: 
கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி: 
சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: 
உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: 
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அமோகமான நாள்.

தனுசு: 
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். கடையை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்: 
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சகோதரி உதவுவார். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்: 
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். தைரியம் கூடும் நாள்.

மீனம்: 
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, களைப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.     
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.