Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

ஒரு கதை சொல்லப் போறன் - (பாகம் 08)

Currently online
மாமர மறைவில் இருந்த அவள் வெளியே வந்தாள்.ரத்தினம் புறப்பட்டவன் திடீரென ஏதோ யோசனை வந்தவனாக

"அக்காட்டயும் சொல்லி விடு போட்டு வாறன் எண்டு" 
என்று சொல்ல திரும்பியவன் வயல் வரம்பில் நடந்து வாசல் நோக்கி வந்த....
அவளை கண்டான்.பருவக் காற்று திசை மாறும் நேரம் இது.வெப்பக்காற்று மேனி குளிர்விக்கும் தருணம் இது.சுற்றம் மறந்து வெட்டை வெளியில் தன்னந்தனிமையில் கூச்சலிடும் பொழுது இது.அவளும் எதிர்பார்க்கவில்லை ரத்தினம் திரும்புவான் என்று.அவனும் எதிர்பார்க்கவில்லை அவளை காண்பேன் என்று.எதிர்பாரா நிமிடங்கள் கிள்ளி நகையாடியது
இருவரையும்.அவள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றாள்.
திரும்பி உடனே ஓடி விடவும் முடியாது.விழி பிதுங்கியவளாக நாணத்துடன் தன்னை சமாளித்துக் கொண்டு தங்கையை அழைத்துக் கொண்டு திரும்பி நடந்தாள்.
அப்பாடா திரும்பி விட்டேன் என்ற நிறைவில் பெருமூச்சு விட்டாலும் ஒவ்வொரு காலடியும் எடுத்து வைக்க வைக்க திரும்பி பார்க்க வேண்டும் போலவே ஊற்றெடுத்தது ஆசை.
அச்சத்தில் வெட்கத்தில் பக்கத்து நெற்கதிரை கைகளால் வருடியபடி வரம்பை தாண்டி வீட்டிற்குள் சென்று விட்டாள்.
ரத்தினம் அங்கே அசைய முடியா ஜடம் போல அவள் மறையும் வரை அவளையே நோக்கி கொண்டிருந்தான்.அவள் கண்களிலிருந்து மறைந்ததும் இழப்பீடு செய்யமுடியா ஒன்றை இழந்தவன் போல தடுமாறி ஒருமாரி அங்கிருந்து புறப்பட்டான்.

இருவர் சிந்தனைகளும் அன்றிலிருந்து தங்களை மறந்து ஒருவரையொருவர் பற்றியே சித்திக்க தொடங்கியது.
தொலைபேசிகள் இல்லை.கடிதங்கள் கைமாற மாதங்கள் கடக்கும்.வீட்டிலே அவளோடு பேச முடியாது.இப்படிப்பட்ட சூழ்நிலையில் மலர்ந்த காதல் அது.ஆனால் எத்தகை ஆசைகள் நெஞ்சோடு வந்தாளும் தாய் சின்னம்மாளை நினைக்கும் பொழுதுகளில் அவள் மனம் காதல் சுடுகாடு ஆகி விடும்.அவளை முதன் முதலில் கண்ட நாளில் இருந்து அடிக்கடி தொழிலை காரணம் காட்டி அவள் வீட்டுக்கு வர தொடங்கினான் ரத்தினம்.ஆனாலும் வழமை போலவே அவளும் வீட்டுக்குள்ளே சென்று விடுவாள்.

தாய் சின்னம்மாள் வீட்டுக்கு அடிக்கடி வேறு ஆண்கள் வருவதை விரும்ப மாட்டாள்.எந்த ஒரு ஆண் வந்தாலும் சந்தேகப் பார்வையே பாப்பாள்.அவள் தந்தை ஆறுமுகம் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதால் வீட்டுக்கு வருவது குறைவு.அதனால் கூட சின்னம்மாள் கண்டிப்பு கூடியவளாக கூட இருக்கலாம்.ரத்தினம் அடிக்கடி வருவதையும் அவள் தாய் விரும்பவில்லை.சின்னம்மாள் அண்ணனிடமும் எச்சரித்தாள்

"அடிக்கடி ரத்தினத்தை இஞ்ச கூட்டி வர வேண்டாம்.பொம்பிளப்பிள்ளையள் இருக்கிற வீடு" 
என்று.அவனும் ஓம் என்பான்.ஆனால் சூழ்நிலை ரத்தினம் அங்கே வரவேண்டியே அமைந்து விடும்.அவளுக்கு அப்போது இருபத்து மூன்று வயது.ஒவ்வொரு பொழுதுகளும் ஏதேதோ கோணங்களில் கடந்து கொண்டிருக்க பல விடியல்கள் மறைந்து சென்றது.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.அவள் அண்ணன்மார் , தங்கை,அவள் தந்தை ஆறுமுகம் மற்றும் சின்னம்மாள் எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்....

அவள் பயணத்தில் - சுஜா தவம்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.