Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

இன்றைய ராசிபலன்....! (08.31.2018)

Currently online
மேஷம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. யாரையும் யாருக் கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். வேலைச்-சுமை மிகுந்த நாள்.

ரிஷபம்

உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர் களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள். 

மிதுனம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசு வார்கள். இனிமையான நாள். 

கடகம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை
கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில்உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள். 
    
சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள். 

கன்னி

சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில காரியங் களை போராடி முடிப்பீர்கள். அடுத்த வர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.  

துலாம்

உங்கள் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள். 

விருச்சிகம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதி காரப் பதவியில் இருப்பவர்களின் நட்புகிடைக்கும். உத்யோகத்தில் உயரதி காரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள் வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

தனுசு

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோ கத்தில் உங்களின் திறமைகளை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள். 

மகரம்

திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் தலை மையின் ஆதரவு கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். 

கும்பம்

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தா சையாக  இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு
கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். 

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். நட்பு வட்டம் விரியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.