Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 31, 2018

ஒரு கதை சொல்லப் போறன் - (பாகம் 09)

Currently online
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.அவள் அண்ணன்மார் , தங்கை,அவள் தந்தை ஆறுமுகம் மற்றும் சின்னம்மாள் எல்லோரும் வீட்டிலேயே இருந்தனர்.அன்று எல்லோரும் வீட்டில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட ரத்தினம் தன் மாமன் ஒருவரோடு அவளை பெண் கேட்பதற்காக சென்றான்.

ரத்தினத்தை கண்டதும் அவள் அண்ணன் "வா மச்சான்"என்று அழைத்தான்.
வாய்ப்போக்கில் அழைத்த அவனது உறவுமுறையை கேட்டு ரத்தினம் உள்ளூர குதூகலித்தான்.ஆனாலும் மனம் படபடத்தபடியே வார்த்தைகள் நாவில் தளும்ப தன்னை சுதாகரித்து கொண்டு புன்னகையை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டு திண்ணையில் அமர்ந்தான்.

அவளது மூத்த அண்ணனும் வீட்டுக்குள்ளிருந்து 
"என்ன காத்து இந்தப் பக்கம் எல்லாம் அடிக்குது" 
என்று ரத்தினத்தின் மாமாவை பார்த்து கேட்டபடி வந்து அருகில் அமர்ந்து கொண்டான்.சின்னம்மாளும் அவளும் ஆறுமுகமும் வீட்டுக்கு பின் புறத்தில் பனம் பாத்தி போட்டுக் கொண்டிருந்தனர்.
ரத்தினத்தின் மாமா மெதுவாக பேச்சை ஆரம்பித்தார்.
"அப்பா இல்லையோ?"
என்று அவர் கேட்க மூத்தவன் அவள் தங்கையை அழைத்து;
"அய்யாட்ட போய் சொல்லு ரத்தினமும் அவற்ற மாமாவும் வந்து நிக்கினம் எண்டு"என்றான்.
அந்த காலத்தில் அப்பாவை அய்யா என்றே அழைப்பார்கள்.அவள் தங்கையும் கொல்லைப் புறம் சென்று அவர்கள் வருகையை கூறினாள்.ஆறுமுகம் கையிலிருந்த மண்வெட்டியை போட்டு விட்டு கிணற்றடிலில் கை கால்களை அலம்பிக் கொண்டு செல்ல பின்னால் தாய் சின்னம்மாளும் சென்றாள்.

அவள் மட்டும் அங்கிருந்து நகரவில்லை.
உணர்வுகளில் ஒரு மின்சார பாய்ச்சல்.
குழப்பம் ஏன் வந்தார்கள் என்று.அவள் தங்கையை பார்த்து
"ஏன் வந்து நிக்கினம்"என்றாள்.

"ம்.எனக்கு சொல்லிட்டு தானே வந்தவை ஏன் வந்த எண்டு.நானே தெரியாம நிக்கிறன்.பிறகு.."என்று அதட்டிக் கொண்டு போனாள்.அவளோ முன்னுக்கு போவமா வேண்டாமா என சிந்தித்தபடியே தன் கேள்விக்கு தானே "இப்ப முன்னுக்கு போக அம்மா கத்துவா.பேசாம இங்கயே இருப்பம்" என்று பதிலும் கூறிக் கொண்டாள்.

அவள் தந்தை ஆறுமுகத்தாரை பார்த்தாலே பயம் எல்லோருக்கும்.அந்த காலத்து பொலிஸ் அல்லவா.அவருடைய கட்டுமஸ்தான தோற்றம்,பேச்சு நேர்த்தி எல்லாமே மரியாதை கலந்த அச்சம் வர வைக்கும்.தந்தையை கண்டதும் அங்கே பேசிக் கொண்டிருந்த அனைவரும் மௌனமானார்கள்.ரத்தினத்திற்கு வியர்த்து கொட்டியது. "இந்த ஆளுட்ட என்னண்டு அவளை கேட்பதென்று.
ஓம் எண்டுவாரோ.இல்லை சண்டை தான் வருதோ.எங்கட வீட்ட வேற சொல்லாம மாமாவ கூட்டி வந்திட்டன்.சரி கேட்டு தான் பார்ப்பமே" என்று மனதோடு பேசிக் கொண்டிருந்தான்.நலம் விசாரித்து பலவற்றை பேசிக் கொண்டிருந்தார்கள் ரத்தினத்தின் மாமாவும் ஆறுமுகமும்.
இடையில் அவளை ஆறுமுகம் அழைத்தான்.
அவளுக்கு நடுங்க தொடங்கியது.விழிகள் பிதுங்க ஆறுமுகத்திடம் சென்றாள்........

அவள் பயணத்தில் - சுஜா தவம்

[ சில சுவாரசியமான விடயங்கள் அவள் பயணத்தில் நான் பயணித்த போது - அவள் என்ற கதாப்பாத்திரத்தின் தங்கையிடம் கேட்டேன் ரத்தினம்வளை மட்டும் தான் காதலித்தவரோ இல்லைன்னா இவாக்கு முன்னம் வேற ஆரையும் காதலிச்சவரோ என்று;சிரித்து விட்டு சொன்னா அதை அவளுட்டயே கேள் என்று..நானும் அவள் கதாப்பாத்திரத்திட்டயே கேட்டன்.அவவும் சிரிச்சிட்டு பேசாம இருந்தா.பிறகு தான் அவள் தங்கை கதாப்பாத்திரத்திற்குரியவர் கூறினார் அப்பிடி இருந்திருந்தாளும் மனைவிட்டயோ மனைவி வீட்டுக்காறருட்டயோ சொல்ல மாட்டினம் தானே என்று ..😃😃இன்னும் நிறைய இருக்கு பிறகு சொல்றன்😃😃]

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.