Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

யாழ் வந்த வெளிநாட்டவர்களின் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் 10 பேர் படுகாயம் !!!

Currently online
அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின், மாரகஹவெவ 27ம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இவ்வாறு காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வானும் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிலரே குறித்த வானில் இருந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.