Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 10, 2018

பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சாய்னா!

Currently online
பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா நெவால் பின்னடைவை சந்தித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான சாய்னா நெவால், கடந்த வாரம் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் கால் இறுதியில், ரியோ ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வியடைந்தார். 

இதனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள உலக பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் சாய்னா 10-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதேவேளையில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 

நான்ஜிங் போட்டியில் சிந்து, இறுதிப் போட்டியில் கரோலினா மரினிடம் தோல்வியடைந்த போதிலும் தரவரிசையில் தனது இடத்தை பறிகொடுக்கவில்லை. சீன தைபேவின் டாய் சூ யிங் முதலிடத்தில் நீடிக்கிறார். ஜப்பானின் அகானே யமகுச்சி 2-வது இடத்தில் உள்ளார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரு இடங்கள் பின்தங்கி 8-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் 11-வது இடத்தில் தொடர்கிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி இரு இடங்கள் முன் னேறி 23-வது இடத்தை பிடித்துள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.