Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, August 05, 2018

ரஷ்ய ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்து ; 18 பேர் பலி!

Currently online
ரஷ்ய ஹெலிகாப்டர்கள் வானில் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

ரஷ்யா வடமேற்கு சைபீரியாவின் வான்கோர் பகுதியில் 15 பயணிகள், 3 பணியாளர்கள் உள்பட 18 பேருடன் எம்ஐ-8 வகை ஹெலிகாப்டர் கிளம்பியது.

அப்போது மேலே பறந்து கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது. இந்த விபத்தில் எம்ஐ-8 ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி ரஷ்யா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலே பறந்துக் கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.