Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 29, 2018

கிளிநொச்சியில் வயல் கால்வாயில் 20 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

Currently online
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரவுன் ரோட் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை அப்பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதனை அடுத்து சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த யுவதிக்கு சுமார் இருபது வயது இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சடலத்தின் முகப்பகுதியில் இடிபட்டு பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் எனவும் சில வேளைகளில் இது வன்புணர்வின் பின்னரான கொலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது

இதுவரை குறித்த சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.