Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

3,250,000 மதிப்புடைய தங்க பிஸ்கட்டுக்கள் பறிமுதல் !!!

Currently online
நபர் ஒருவர்  சுமார் 3.2 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்த போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கம்பஹா பகுதியை சேர்ந்த 51 வயதானவர். இவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை 4.30 மணி அளவில் UL 303 விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, 500 கிராம் எடையுள்ள 5 தங்க பிஸ்கட்கள் குறித்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த தங்க பிஸ்கட்டுக்கள் 3,250,000 ரூபாய் பெறுமதி மதிப்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய விமான நிலைய சுத்திகரிப்பு சேவை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.