Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 27, 2018

வவுனியாவில் 39 பொதுக் கிணறுகளை ஆழப்படுத்த நடவடிக்கை!

Currently online
வவுனியா மாவட்டத்தில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள 39 பொதுக் கிணறுகளை ஆழப்படுத்த தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் இஸ்மாலெப்பை முகமட் ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் வரட்சி நிவாரண வேலைத்திட்டம் தொடர்பில் இன்று கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவின் பல கிராமங்களில் குடிநீரைப் பெற்றுக் கொள்ள மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

மக்களது குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக வவுனியா மாவட்டத்தில் 39 பொதுக் கிணறுகளை ஆழப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 15 பொதுக் கிணறுகளும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 07 பொதுக் கிணறுகளும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 10 பொதுக் கிணறுகளும், வவுனியா வடக்கு பிரசே செயலக பிரிவில் 07 பொதுக் கிணறுகளும் என 39 பொதுக் கிணறுகளை ஆழப்படுத்துவதற்காக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.