Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 08, 2018

கருணாநிதியின் இறுதிக்கிரியையில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி இருவர் மரணம்: 41 பேர் காயம்!

Currently online
மறைந்த கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் காயமடைந்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்கள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்தவண்ணம் இருந்தனர். அங்கு, பொதுக்கள் அஞ்சலி செலுத்த ஒரு வழியும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், முக்கியப் பிரமுகர்களுக்கான வழியிலும் பொதுமக்கள் புக ஆரம்பித்தனர். இதையடுத்து கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

ராஜாஜி ஹாலின் சுவர்களை ஏறிக்குதித்தும் சிலர் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைய முயற்சித்தனர். இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை தடியடி நடத்தியது.

இதற்குப் பிறகு ஏற்பட்ட நெரிசலில் பலர் சிக்கி கீழே விழுந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் 42 பேர் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்டதாகவும் அந்த மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.