Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 01, 2018

கோர விபத்து ; கோவையில் 7 பேர் பலி, 3 பேர் படுகாயம் !!

Currently online
கோவையில் சொகுசு கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே  7 பேர்  உயிரிழந்துள்ளனர்.

கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த சொகுசு சாலையோரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீதும் ஆட்டோ ஒன்றின் மீதும் கடுமையாக மோதியது. இதில் அந்த ஆட்டோ அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதி முழுவதுமாக நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவிலிருந்த 4 பேரும், வீதியோரம் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 2 பேர் மற்றும் ஒருவர் என 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுனரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.