Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, August 03, 2018

காமக் கொடூரர்களால் பாலியல் பலாத்காரத்துக்குள்ளான 8 மாத கர்ப்பிணி பெண் !!!

Currently online
கணவனை காரில் அடைத்து பூட்டிவிட்டு 8 மாத கர்ப்பிணி பெண்ணை 4 காமக் கொடூரன்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டல் நடத்தி வருகின்றனர். 

இவர்கள் இருவரும் தங்கள் ஹோட்டலுக்கு வேலையாட்களைத் தேடி பக்கத்து மாவட்டமான சங்லி மாவட்டத்தில் உள்ள துர்சி பாட்டாவுக்கு காரில் சென்றுள்ளனர்.

அங்கே ஒருவன் அந்த தம்பதிகளிடம் ஹோட்டலில் வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறியதோடு ஹோட்டலில் வேலை செய்ய மேலும் இரண்டு பேர் ஆர்வமாக இருகிறார்கள் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளான். 

அங்கே காரில் சென்றதும் அந்த நபர் தம்பதியரைத் தாக்கியுள்ளான். மேலும், கணவனை காரில் வைத்து பூட்டிய பின், அவருடைய 8 மாத கர்ப்பிணி மனைவியை இழுத்துச் சென்று 4 பேர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 

பின்னர், அவர் அணிந்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதிகள் அங்கிருந்த டஸ்கான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேர்களைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். ஒருவன் மட்டும் தலைமறைவாக உள்ளான். 

8 மாத கர்ப்பிணியை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.