Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, August 18, 2018

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் மீட்பு!

Currently online
வவுனியா கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 9 வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கபட்டுள்ளது.

சம்பவத்தில் பாணுசன் என்ற 9 வயது சிறுவனே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

நேற்றையதினம் தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் தொழிலுக்கு சென்றுள்ளதுடன் வீட்டில் குறித்த சிறுவன் தனிமையில் இருந்துள்ளார். 

அவனது 3 வயதான சகோதரன் அயல் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்ததும் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்ற சிறிய தந்தை இளைய மகனை அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற சமயத்தில் மற்றைய மகனை காணவில்லை என தேடியுள்ளார்.

இந் நிலையில் வீட்டிற்கு அருகில் பயன்படாத நிலையில் உள்ள ஆட்டு கொட்டிலில் தூக்கில்  தொங்கிய படி இருந்த சிறுவனை அவனது சகோதரன் அவதானித்து தந்தைக்கு தெரியப்படுத்தியுள்ளான்.

பின்னர் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டது. 

இச் சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவனின் சிறியதந்தை கூறியதாவது,

தூக்கில் தொங்கும் அளவுக்கு எனது மகனிற்கு போதிய விளக்கம் இல்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை இந்த கொடிய செயல் திட்டமிட்டு செய்யப்பட்டதாக கூறினார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.