Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 06, 2018

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் ; 91 பேர் பலி!

Currently online
இன்று இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் மிக தீவிரமாக இல்லை. பூமியின் மேல் பரப்புக்குக் கீழே சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மட்டுமே இது ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைகள் மற்றும் மலையேற்ற பாதைகளுக்கு பிரசித்திபெற்ற சுற்றுலாதளமான லோம்போக் தீவில் கடந்த வாரம் 16 பேர் உயிரிழக்க காரணமான நிலநடுக்கத்தை அடுத்து, நேற்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், சில மணி நேரங்களில் இந்த எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.

சேதமடைந்த பெரும்பாலான கட்டடங்கள் தரம்குறைந்த மற்றும் வலுவில்லாத கட்டுமான பொருட்களால் கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது.

பாலி தீவை விட பரப்பளவில் லோம்போக் தீவு சற்று பெரியதாகும். இந்த இரு தீவுகளிலும் மூன்றிலிருந்து நான்கு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். மேலும், உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுலா வாசிகள் வந்து செல்கின்றனர்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.