Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, August 08, 2018

கருணாநிதியின் மறைவுக்கு ஈழத்தமிழர்கள் இரங்கல்!

Currently online
உயிரிழந்த கலைஞர் கருணாநிதிக்கு ஈழத்தமிழர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

உடல்நிலை குறைவின் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுமார் 6.10 அளவில் உயிரிழந்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இலங்கை உட்பட்ட புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழர்களும் தமிழக மக்களினதும், கருணாநிதியின் குடும்பம் உட்பட்ட தி.மு.க தொண்டர்களினது துயரத்தில் தங்களது பங்களிப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பிற்கு கருணாநிதியும் காரணமாக இருந்தார் என்றும் அவர் நினைத்திருந்தால் ஈழத்தமிழ் மக்களின் உயிர்களை காப்பாற்றி இருக்கமுடியம் என்றும் தமிழர்களின் இன அழிப்பிற்கு காரணமாக அமைந்த ஒருவர் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயாருக்கு சிகிச்சையளிக்க மறுத்து விமானத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் அவர்மீது கோபமடைந்த நிலையில் ஈழத்தமிழர்கள் இருந்தாலும் கலைஞரின் பெருமைகளையும், அவர் தமிழுக்காற்றிய பங்களிப்பையும் கருத்தில் கொண்டும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தங்களது இரங்கல்களை ஈழத்தமிழர்கள் பதிவு செய்து வருவது அவர்களுடைய நாகரிகத்தையும், பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.