Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, August 27, 2018

உள்ளத்தில் இருப்பது நீயா....!

Currently online
மொழியறியா மோதல்
மௌனத்தின் தேடல்
மனந்திறவா மந்திரம்
மறைவாக இருக்க எண்ணும் காதல்..!

விடையறியா கேள்வி
விரும்பிவரும் மகிழ்ச்சி
தொலைவில் அவ(னோ)ளோ..!
தொடர்பில் இருக்க வைக்கும் காதல்..!

நெருக்கங்கள் கூடக்கூட......
நெனப்பும் நெஞ்சோரமாகும்..!
வழக்கங்கள் மாறும்போது
வாழ்க்கைக்கு பலம்தேடும் காதல்..!

ஒருவருக்கொருவர் ஒருவிதப் பிடிப்பு
இருவர்க்கு இடையே இருவித நடிப்பு
வாழ்க்கையை வாழாது வாழ்வென்ன வாழ்வா..!
வருத்தங்கள் நிகழாது வரும்காலமுண்டா..!

எதிர்பாராது நடப்பவை விபத்து.
எதிரும் புதிருமாய் நமக்கேன் வெறுப்பு
இருவர் பிடிப்பில் தான் இணைந்தோம்...
இரண்டரை வருடத்தில் இடைவெளியோ பெரிது..!

காணாமல் போன காதல்
வீணாய் போன வாழ்க்கை
பெரியவர்கள் பேச்சை மதிக்கவில்லை
பெரிதாக வளர்ந்தும் சரியான புரிதலில்லை..!
காரணமானது நானா..!

         நன்றி 
வன்னியூர் சுகிர்
  கிளிநொச்சி

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.